[Ruby_E_Template slug="buzzstream-header"]
Font ResizerAa
My BlogMy Blog
  • My Saves
  • My Interests
  • My Feed
  • History
Search
  • Pages
    • Home
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • Personalized
    • My Feed
    • My Saves
    • My Interests
    • History
  • Categories
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
அரசியல்

உள்ளூராட்சி தேர்தல் இலக்கு – களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

admin
Last updated: November 21, 2024 6:15 pm
admin
உள்ளூராட்சி தேர்தல் இலக்கு: களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாணசபை தேர்தலிலே போட்டியிட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி (Tamil Makkal Viduthalai Pulikal) தீர்மாணித்துள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று 21.11.2024 திருகோணமலை (Trincomalee) நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளர் நாயகம் கந்தசாமி இன்பராசா (Kandasamy Inparasa), “பொதுச்சபையானது இன்றைய தினம் கூட்டப்பட்டு அதிலே புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது.

உள்ளூராட்சி சபை 

தொடர்ச்சியாக, கடந்த காலங்களில் இடம்பெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் வட கிழக்கு ரீதியாக போட்டியிட்டிருந்த போதிலும் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டதன் காரணமாக தேர்தலிலே பின்னடைவினை சந்தித்திருப்பதாகவும், வருங்காலத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாணசபை தேர்தலிலே போட்டியிட்டு தமிழ் மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் களமிறங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஆசனம் ஒன்றினை பெற்றுக்கொள்ளும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் இதன்போது தெரிவித்திருந்தார்.

அத்துடன் நிர்வாகத் தெரிவிலே வட கிழக்கு ரீதியில் காணப்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப்பட்டதுடன் கட்சியின் தலைவராக ரோய் அருமைநாயகம் ரமேஷ்காந், செயலாளர் நாயகமாக கந்தசாமி இன்பராசா மற்றும் ஊடக பேச்சாளராக ராஜீ குகதீபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

TAGGED:Sri LankaSri lanka election 2024Sri Lanka election updatesTamil Makkal Viduthalai Pulikalதமிழ் விடுதலைப் புலிகள் கட்சி
Previous Article கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு - 38பேர் பலி கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு – 38பேர் பலி
Next Article தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்: முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல் தீவிரமடையும் ரஷ்ய – உக்ரைன் போர் – முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல்

You Might Also Like

அரசியல்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீதிமன்றம் பிடியாணை

By admin
Political prisoners
அரசியல்

விடுக்கப்படாத காணி மற்றும் அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – தேசிய மக்கள் சக்தி

By admin
அநுர அரசுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு
இந்தியா

அநுர அரசுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு

By admin
இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பொருளாதாரம்

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

By admin
[Ruby_E_Template slug="buzzstream-footer"]
Welcome Back!

Sign in to your account